ஆசிய கிண்ணம் தொடர்பில் வெளியான தகவல்

Friday, 24 March 2023 - 8:26

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
இந்திய அணி, ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகளில், இலங்கை, இங்கிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில், ஏதேனும் ஒரு நாட்டில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது.

எனினும், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள், பாகிஸ்தானுக்கு வெளியே போட்டிகளில் பங்கேற்பது குறித்து, இரு நாடுகளின் கிரிக்கட் சபைகளும் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணி, தமது போட்டிகளை, இலங்கை, இங்கிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில், ஏதேனும் ஒரு நாட்டில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனினும், இது குறித்த இறுதித் தீர்மானம் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.