நடிகர் அஜித் குமாரின் தந்தை காலமானார்: உடல் இன்று தகனம்!

Friday, 24 March 2023 - 13:45

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%3A+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 3:15 மணியளவில் காலமானார்.

இந்தநிலையில், நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியத்தின் உடலம் இன்று(24) தகனம் செய்யப்பட்டுள்ளது.

சுப்பிரமணியத்தின் உடலம், சென்னை - ஈஞ்சம்பாக்கம் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் நடிகர் அஜித் குமாரும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

மின்மயானத்தை சென்றடைந்த சுப்பிரமணியத்தின் உடலை அஜித் தூக்கி சென்றார்.

பின்னர் அவரின் உடலுக்கு அஜித்தின் குடும்பத்தினர் சார்பில், குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.