யுக்ரைனில் ஆளில்லா விமானங்கள் உற்பத்தி?

Friday, 24 March 2023 - 22:50

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%3F
வடக்கு யுக்ரைன் பிரதேசத்தில் உள்ள பாரிய தொழில்துறை வளாகத்தில் ஆளில்லா விமானங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த உற்பத்திக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் உக்ரேனை சேர்ந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் ஆலோசனைக்கு அமைய பொறியியல் நிபுணர்களை கொண்ட குழுமம் ஒன்று இயங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் உற்பத்தியாகும் இராணுவ ஆளில்லா விமானங்கள் நீண்ட பயணத்தை மேற்கொண்டு குறிப்பிடப்படும் இலக்கினை தாக்கக்கூடிய தகைமையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவில் அமெரிக்க இராணுவம் சிரியாவில் உள்ள இலக்கொன்றை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் சிரியாவில், ஈரான் சார்பாக செயல்படும் சில குழுக்களின் நிலைகளை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்களில் ஈரானிய ஒத்துழைப்புடன் செயல்படும் எட்டு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஈரானிய சார்பான ஆயுத குழுக்கள் மேற்கொண்ட ஆளில்லா விமானங்கள் தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இது தவிர, 5 அமெரிக்க இராணுவத்தினரும் காயமடைந்துள்ளனர்.

இதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நேரடி பணிப்புரைக்கு அமைய பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.