198 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி!

Saturday, 25 March 2023 - 12:52

198+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்போது நியூசிலாந்து அணி சார்பில் ஃபின் எலன் 51 ஓட்டங்களையும், டெரில் மிச்செல் 47 ஓட்டங்களையும், கிளென் பிலிப்ஸ் 39 ஓட்டங்களையும், பெற்றனர்.

இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிசார்பில் ரச்சின் ரவீந்திர, ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை குவித்தார்.

இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன அபாரமாக பந்துவீசி 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் நோக்கில் களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்போது, அஞ்சலோ மெத்திவ்ஸ் மாத்திரமே அதிகூடிய வகையில் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஹென்றி ஷிப்லி 7 ஓவர்களில் 31 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

அத்துடன், டெரில் மிச்செல் மற்றம் பிளயார் ரிக்னர் ஆகியோர் முறையே 12 மற்றும் 20 ஓட்டங்களைக் கொடுத்து தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி 28 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 31 ஆம் திகதியுடன் இடம்பெறவுள்ளது.