தமிழில் படத்தை இயக்கும் பிரேமம் பட இயக்குநர் - நடிகர்கள் தேர்வு ஆரம்பம்

Sunday, 26 March 2023 - 16:33

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரேமம் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபல்யமானார்.

இந்தத் திரைப்படம் வெளியாகி 6 வருட இடையின் பின்னர் தமது இரண்டாவது படைப்பான கோல்ட் திரைப்படத்தை (மலையாளம்) 2022 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இந்தநிலையில், அவர் தற்போது, தனது அடுத்தப் படத்தைத் தொடங்கத் தயாராகியுள்ளதாகவும், இந்த முறை அவர் தமிழில் தமது திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ராகுல் கூறுகையில், “இது ஒரு காதல் படமாக இருக்கும். தற்போது நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் 10-12 நாட்களில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.

அத்துடன், அல்போன்ஸ் இதை தமிழில் தயாரிக்கும் அதேவேளையில், இதனை பான் இந்தியா படமாக வெளியிடும் வகையில் ஒரு இந்திய நடிகரை தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

ஏப்ரல் இறுதிக்குள் படத்தின் பணிகளை ஆரம்பிக்க அல்போன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் ராகுல் மேலும் தெரிவித்தார்.