போஜ்புரி நடிகை ஆகான்க்சா துபே உயிரை மாய்த்துக்கொண்டார்!

Sunday, 26 March 2023 - 17:44

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
பிரபல போஜ்புரி திரைப்பட நடிகை ஆகான்க்சா துபே(25) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள விடுதி ஒன்றிலேயே இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆகான்க்சா துபேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17ஆவது வயதில் ஆகான்க்சா துபே அறிமுகமானார்.

அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி - 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்துள்ளார்.

நேற்றிரவு பாடல் ஒன்றுக்கு செல்பி வடிவிலான காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார் ஆகான்க்சா துபே.

இவர் நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதல் தொடர்பில் இருந்ததுடன், அதுபற்றி அண்மையில் (காதலர் தினத்தில்) சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.