விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் IMF பணிப்பாளர்!

Sunday, 26 March 2023 - 22:46

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+IMF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%21
நிதி ஸ்திரத்தன்மைக்கான அபாயங்கள் அதிகரிப்பு மற்றும் வங்கித் துறையில் சமீபத்திய கொந்தளிப்பைத் தொடர்ந்து 'விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை' சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வலியுறுத்தினார்.

சீனாவின் பீஜிங்கில், இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு மற்றுமொரு சவாலான ஆண்டாக இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம், பணவீக்கம் மற்றும் தொற்றுநோய்களின் தாக்கம் காரணமாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

இந்தநிலையில், உலகப் பொருளாதாரத்திற்கான பார்வை, நடுத்தர காலத்திற்கு பலவீனமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிதி ஸ்திரத்தன்மைக்கான அபாயங்கள் அதிகரித்துள்ளன என்பது தெளிவாக உள்ளது.

அத்துடன், நிதித்துறையின் ஆரோக்கியம் பற்றிய அச்சம் மீண்டும் எழுந்ததால் வங்கிப் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை சரிந்துள்ளன.

அதேநேரம், நிதி ஸ்திரத்தன்மை அபாயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கொள்கை வகுப்பாளர்கள் தீர்க்கமாக செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் சந்தையில் ஓரளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால் நிச்சயமற்ற தன்மை அதிகமாக உள்ளது, இது உலக பொருளாதார விழிப்புணர்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.