2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹொங்கொங்கில் முதலாவது போராட்டம் இன்று இடம்பெற்றது.
ஹொங்கொங்கில் வாழும் மக்களின் உரிமைகள் மற்றும் மக்களின் சுதந்திரத்தின் மீது சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தப்பின்னர் குறித்த போராட்டம் காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் 100 பேர் மாத்திரம் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு இலக்கத்துடனான ஆடைகளை அணிய வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹொங்கொங்கின் கிழக்கு பகுதியில், உள்ள நில மீட்புக்கு எதிராக இடம்பெற்ற இந்த போராட்டத்தில், ஊடகவியலாளர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் தனித்தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாக குறிப்பிடப்படுகிறது.
தாம் போராட்ட பேரணிக்கு ஆதரவுக்காக வந்துள்ளோம், தாம் அவமானமான போராட்டத்துக்கு வரவில்லை என்றும் காவல்துறையின் செயற்பாடுகள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் போராட்டத்தில், ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஹொங்கொங் சீனாவின் சிறப்பு நிர்வாக அலகாகும்.
ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் என்ற கொள்கையின் கீழ் மக்கள் தாம் வாழும் நிலப்பரப்பில், தமது உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், சீனாவில், ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர சட்டம் தேவை என்பது அவசியமாகும்.
கருத்து வேறுபாடுகளை வீணடிப்பதற்கும் ஹொங்கொங்கின் சுயாட்சியை பலவீனப்படுத்துவதற்குமான சீனாவின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.