இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

Monday, 27 March 2023 - 16:35

%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%21+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21
குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி பயின்ற விஹங்கனா நுவந்தி என்ற 19 வயதான மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது சகோதரி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நிலையில் விஹங்கனா பொதுப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், ஆங்கில மொழியில் உயர்தர வர்த்தகப் பாடத்தில் கல்வி கற்க குருநாகல் பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த 17ஆம் திகதி கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமானமையினால், அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​ஆபத்தான நிலையில் இருந்த அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுயநினைவின்றி உயிரிழந்தார்.

மூளைப் புற்று நோய் காரணமாக மூளைச் சாவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

வெளியில் எந்த அறிகுறியும் காட்டாமல் பரவ ஆரம்பித்த புற்று நோயால் அவரது மரணம் சம்பவித்ததாக தாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க விஹங்கனாவின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி இறந்த பின்னரே தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனிடையே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.