நடிகர் அஜித் குமாரின் தந்தை மறைவு: நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா - கார்த்தி!

Monday, 27 March 2023 - 14:11

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%3A+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21
நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ஆம் திகதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 24ஆம் திகதி அதிகாலை 3:15 மணியளவில் காலமானார்.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குமாரின் வீட்டுக்கு சென்றே சூர்யா மற்றும் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.