தங்கத்தின் விலையில் மாற்றம்!

Monday, 27 March 2023 - 17:21

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21
நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.