LPL கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

Monday, 27 March 2023 - 21:32

LPL+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
4ஆவது லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான திகதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரையில் இந்த தொடர் இடம்பெறவுள்ளது.

5 அணிகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரானது இலங்கையில் உள்ள மூன்று சர்வதேச விளையாட்டு மைதானங்களில் இடம்பெறவுள்ளது.

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 20 வீரர்களைக் கொண்டதாக இருக்கும்.

அதில் 14 இலங்கை வீரர்களும் ஆறு வெளிநாட்டு வீரர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.