பெஞ்சமின் நெத்தின்யாஹூவின் நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு மக்கள் எதிர்ப்பு!

Monday, 27 March 2023 - 22:44

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இஸ்ரேலிய நீதித்துறையில் பிரதமர் பெஞ்சமின் நெத்தின்யாஹூ மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இஸ்ரேலின் நீதித்துறை கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக இராணுவத்திற்கு அபரிமிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு நாடளாவிய ரீதியாக சீற்றத்துடன் மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் பெஞ்சமின் நெத்தின்யாஹூ தமது பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதி போரட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெரூசலத்தில் உள்ள இஸ்ரேலிய பிரதமரது இல்லத்திற்கு முன்னால் கூடியுள்ள ஆயிரக்கணக்கானவர்களை கலைக்க இராணுவமும் காவல்துறையும் இணைந்து நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

டெல் அவிவ் சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதை அடுத்து விமான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களை நியமிப்பது முதல் நீதித்துறை நடவடிக்கைகள் அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கான செயல்பாட்டில் பெஞ்சமின் நெத்தின்யாஹூ சர்வாதிகார முறையில் செயல்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.