3 ஆண்டுகளில் 1,600 பீரங்கிகளை தயாரிக்க ரஷ்யா ரகசிய திட்டம்

Monday, 27 March 2023 - 22:58

3+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+1%2C600+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
யுக்ரைனுடனான ரஷ்யாவின் போரானது நீட்டிக்கப்பட்டு வரும் சூழலில், இதற்கு ஆயுதம் வழங்கும் நடவடிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என ரஷ்யா குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய ஆதரவு செய்தி ஊடகங்களில் ஒன்றான நொவோஸ்தி வெளியிட்ட செய்தி ஒன்றில், புட்டின் கூறும்போது, யுக்ரைனுக்கு எதிரான போருக்கு 420 அல்லது 440 பீரங்கிகளையும், அதே அளவிலான வெடிபொருட்களையும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், தற்போது எங்கள் வசமுள்ள 1,600க்கும் மேற்பட்ட பீரங்கிகளை விட புதிய மற்றும் நவீனத்துவம் வாய்ந்த பீரங்கிகளை நாங்கள் உற்பத்தி செய்வோம்.

யுக்ரைனின் ஆயுத படையில் உள்ள பீரங்கிகளின் எண்ணிக்கையை விட ரஷ்ய இராணுவத்தின் மொத்த பீரங்கி எண்ணிக்கை 3 மடங்கு கூடுதலாக இருக்கும்.

விமான படையை பற்றி கூற வேண்டியதில்லை. இந்த வேற்றுமையானது 10 மடங்காக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு யுக்ரைன் இராணுவம் 15 பீரங்கி குண்டுகளை பயன்படுத்துகிறது.

அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு தோராய அடிப்படையில், 15 ஆயிரம் பீரங்கி குண்டுகளை உற்பத்தி செய்கிறது.

உதவிகள் என்ற பெயரில் யுக்ரைனுக்கு மேற்கத்திய நட்பு நாடுகள் இராணுவ தளபாடங்களை அனுப்பி வருவது என்பது, இந்த போரை நீட்டிக்க செய்வதற்கான ஒரு முயற்சியே.

அது மிக பெரிய சோகத்திலேயே சென்று முடியும்.

வேறு ஒன்றும் இருக்காது என்பது எனது கருத்து என்று புட்டின் கூறியுள்ளார்.