விஜயின் இன்ஸ்டாகிராம் அறிமுகம் முறியடித்த சாதனைகள்!

Monday, 03 April 2023 - 12:06

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
தளபதி விஜய்யின் இன்ஸ்டாகிராம் அறிமுகம் இந்திய அளவில் புதிய சாதனையை பதிவுசெய்துள்ளது.

நடிகர் விஜய் நேற்று மாலை 4 மணியளவில் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கைத் திறந்தார். இது 24 மணித்தியாலங்களுக்குள் விரைவாக 4 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது.

நேற்று இரண்டு மணி நேரத்திற்குள், அது ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டியது. இந்த கணக்கு வெறும் 99 நிமிடங்களில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை அடைந்தது.

இது இந்தியாவில் மிக விரைவாக ஒரு மில்லியன் பின்தொடர்பவர் (பலோவர்) என்ற மைல்கல்லை எட்டிய இன்ஸ்டாகிராம் கணக்காகும்.

BTS V (53 நிமிடங்கள்) மற்றும் ஏஞ்சலினா ஜோலி (59 நிமிடங்கள்) ஆகியோருக்குப் பிறகு, ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் எட்டிய உலகளவில் மூன்றாவது வேகமான Instagram கணக்கு இதுவாகும்.

விஜயின் கணக்கு, @actorvijay 2 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டி தற்போது 4.3 மில்லியனாக உள்ளது.

தளபதி விஜய் இன்ஸ்டாவில் தனது வருகையை முன்னிட்ட இட்ட பதிவு விரைவாக 2.6 மில்லியன் விருப்பங்களை (லைக்) பெற்றது.

இது சிவகார்த்திகேயனுக்கு பிறகு அதிகம் விரும்பப்பட்ட கோலிவுட் கொலிவூட் நடிகர் ஒருவரின் பதிவாக கருதப்படுகிறது.

அத்துடன், யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் இடுகைகளுக்குப் பிறகு, இந்தியாவில் மிக வேகமாக 1 மில்லியன் விருப்பங்களை பெற்ற புகைப்படங்களில் விஜய்யின் பதிவு மூன்றாவது இடத்தில் உள்ளது.