சூர்யா 42 படத்தின் தலைப்பு கசிந்துள்ளது!

Thursday, 06 April 2023 - 18:14

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+42+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%21
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.

சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இப்படத்தில் பொலிவூட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இத்திரைப்படம் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், சூர்யா 42 படத்தின் தலைப்பு கசிந்துள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு 'அக்னீஸ்வரன்' என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

எனினும், சூர்யா 42 படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் திகதி குறித்த அறிவிப்பு எதிர்வரும் 16ஆம் திகதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது.