தனுஷின் படத்துக்கு முன் துருவை இயக்கும் மாரி செல்வராஜ்

Tuesday, 11 April 2023 - 18:24

%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது வுண்ர்பார் தயாரிக்கு புதிய படம் தொடர்பான தகவலை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

கடைசியாக 2018 இல் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் 'மாரி 2' படத்தைத் தயாரித்தார்.

இந்தநிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தை தமது நிறுவனம் சார்பில் தயாரிக்கும் தனுஷ், அதில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் பெறும் வெற்றிபெற்றது.

இந்த கூட்டணி மீண்டும் ஒருமுறை இணையவுள்ளது. படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ் நேற்றுமுன்தினம் இந்த திட்டத்தை அறிவித்தார்.

இயக்குநர் மாரி செல்வராஜுடன் இணைந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், "பல காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்த ஒரு மதிப்புமிக்க திட்டம். ஓம் நமசிவாய" என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ், "கர்ணன் வெளியான அதே நாளில் இதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தனுஷுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்ப்பதில் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஸீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கவுள்ளது.

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஷ்வரனுடன் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் முதலில் துருவ் விக்ரமுடன் தனது படத்தை தொடங்கி பின்னர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார்.