முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீரர்

Monday, 08 May 2023 - 22:38

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ண தொடரின் இறுதி போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் வீரர் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இசான் கிஷான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் தசைப்பிடிப்பு காரணமாக கே.எல்.ராகுலுக்கு பதிலாக இசான் கிஷான் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
இசான் கிசான் இதுவரையில் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடியதில்லை.

எனினும் 14 ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மற்றும் 27 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் என்பவற்றில் இசான் கிஷான் விளையாடியுள்ளார்.