அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் - தசுன் ஷானகவை ஒப்பந்தம் செய்தது சியாட்டல் ஓர்காஸ்

Wednesday, 10 May 2023 - 15:13

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D
அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் பருவத்துக்காக, சியாட்டல் ஓர்காஸ் அணி, இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 அணித்தலைவர் தசுன் ஷானக்கவை ஒப்பந்தம் செய்துள்ளது.

தசுன் ஷானக்க தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

அஹமதாபாத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் முழங்காலில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் 2023 இல் இருந்து வெளியேற்றப்பட்ட கேன் வில்லியம்சனுக்கு பதிலாக ஷானகவை குஜராத் டைட்டன்ஸ் அணி இணைத்துள்ளது.

இந்தநிலையில், 2023 மேஜர் லீக் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

ஜூலை 30 இறுதிப் போட்டி உட்பட அனைத்து 19 போட்டிகளும் டெக்சாஸில் உள்ள புதிய கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெறும்.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ், நியூசிலாந்தின் முன்னாள் சகலதுறை வீரர் கோரி ஆண்டர்சன், இங்கிலாந்தின் லியாம் பிளங்கட், இலங்கையின் ஷெஹான் ஜயசூர்யா உட்பட பல சர்வதேச வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மேஜர் லீக் தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகள்

சியாட்டல் ஓர்காஸ்

MI நியூயோர்க்

வொஷிங்டன் ப்ரீடம்

சென் பிரான்சிஸ்கோ யூனிகோர்ன்ஸ்

லொஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்