பஞ்சாப் கிங்ஸ் 31 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, 13 May 2023 - 23:07

%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+31+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதேவேளை, இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 183 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.