சச்சினின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!

Tuesday, 16 May 2023 - 18:26

%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்சஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின.

இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

அந்த அணிசார்பில் துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த இன்னிங்ஸில் இவர் 22 பந்துகளில் 50 ஓட்டங்களை குவித்தார்.

குறிப்பாக இவர் ஆறு ஓட்டங்கள் எதனையும் அடிக்காமல், இந்த அரைச்சதத்தை பெற்றுள்ளார்.

இதன்படி, சுப்மன் கில் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010ஆம் ஆண்டு மும்பை அணிக்காக, டெல்லி அணிக்கெதிரான போட்டியில் 23 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.(ஆறு ஓட்டங்கள் ஏதும் இன்றி)

இதன்படி, ஆறு ஓட்டங்களின்றி குறைந்த பந்துகளில் அரைச்சதம் பெற்றவர் என்ற சச்சினின் சாதனையை சுப்மன் கில் நேற்றைய போட்டியில் முறியடித்துள்ளார்.