புதிய காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு கர்நாடகாவின் முதல் சட்ட சபை இன்று முதல் முறையாக பெங்களூருவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டு புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்தக் கூட்டத்தொடர் எதிர்வருதம் 24ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறும்.
கர்நாடக சட்ட சபையின் தற்போதைய கூட்டத்தொடருக்கு இடைக்கால சபாநாயகராக காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே செயற்படுவார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா 2 ஆவது முறையாக முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றார். கர்நாடக துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்றார்.
பெங்களூருவில் நடந்த பதவியேற்பு விழாவில் 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடக அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.