குஜராத்தின் வெற்றியை கொண்டாடும் மும்பை வீரர்கள்!

Monday, 22 May 2023 - 14:42

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய இரண்டாவது தீர்மானமிக்க போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது.

பிளே -ஓப் கனவுடன் விளையாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, பிளே - ஓப் வாய்ப்பை இழந்ததுடன், மும்பை அணிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

நேற்று வரை இடம்பெற்றிருந்த போட்டிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் , சென்னை சுப்பர் கிங்ஸ், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே - ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன.

எனினும், மும்பை, பெங்களூர்,குஜராத்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கான தலா ஒவ்வொரு போட்டிகள் மீதமிருந்தன.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த நிலவரப்படி மும்பை, பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பிளே - ஓப் செல்வதற்கான வாய்ப்பு நேற்றைய போட்டியின் முடிவுகளின் அடிப்படையில் தீர்மானமாகும் என்ற நிலை காணப்பட்டது.

இந்தநிலையில், போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன், மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் நேற்றைய போட்டிகளில் விளையாடின.

மும்பை அணியின் துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த ஆட்டம் அந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்தது.

எனினும், நேற்யை நாளில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணி போராடி தோற்றிருந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 198 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 104 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சுப்மன் கில் - விஜய் சங்கரின் அதிரடியான ஆட்டம் குஜராத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

ஒருவேளை இந்தப் போட்டியில் பெங்களூர் அணி வென்றிருந்தால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறி மும்பை அணியை விட அதிகமான நெட் ரன் ரேட்டுடன் பிளே - ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.

எனினும், இந்த தோல்வி மூலம் அவர்கள் பிளே - ஓப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.

இந்தநிலையில், நேற்றைய போட்டியை ஆர்வத்துடன் பார்த்த மும்பை அணி வீரர்கள் குஜராத் அணியின் வெற்றியை கொண்டாடும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அத்துடன், இம்முறையும் பெங்களூர் அணியினால் கிண்ணம் வெல்ல முடியாமை வருத்தளிப்பதாக பெங்களூர் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.