வடமேல் மாகாணத்தில் கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த தடை

Tuesday, 30 May 2023 - 13:34

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
கால்நடைகளுக்கு தோல் கட்டி நோய் பரவி வருவதால் வடமேல் மாகாணத்தில் கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் டி.சி.எஸ். பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக தொடர்ந்தும், வடமேல் மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல் கட்டி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.