கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கருவியாக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை

Tuesday, 30 May 2023 - 12:36

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+
இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கருவியாக, குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரத்தின் நியாயமற்ற கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்காத வகையில், வெறுப்புணர்வை வலியுறுத்துவதை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து சட்டங்கள், கொள்கைகள், கடுமையான முறையில் பயன்படுத்தப்படுவதை இலங்கை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

எனினும் இலங்கை அரசாங்கம், இந்த சர்வதேச சட்டத்தை, உள்நாட்டில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது என்று மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் உடன்படிக்கையை அங்கீகரித்த பின்னர் இலங்கை கடைப்பிடிக்க உறுதியளித்த கடமைகளை உள்நாட்டு சட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்காகவே குடியியல்; மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.

எனினும் முரண்பாடாக, இலங்கை அதிகாரிகள் சிறுபான்மையினரை குறிவைக்கும் அடக்குமுறை கருவியாக இதனை பயன்படுத்துவதாக மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.