அட்லாண்டிக் கனேடிய மாகாணமான நோவா ஸ்கோடியாவில் பரவிய காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நோவா ஸ்கோடியாவின் மிகப்பெரிய நகரமான ஹாலிஃபாக்ஸ் அருகே சுமார் 16 ஆயிரத்து 400 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடும் வெப்பமான காலநிலை காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் தீ தொடர்ந்து பரவி வருவதால் அங்குள்ள மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோடியாவில் ஏற்பட்ட தீ 'பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், தேவைப்பட்டால் உதவி வழங்க தனது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஹாலிஃபாக்ஸின் வடமேற்கே சுமார் 788 ஹெக்டேர் நிலப்பரப்பு எரியுண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.