வடிவேல் சுரேஷ் மற்றும் ராஜித்த சேனாரத்னவிடம் விளக்கம் கோர தீர்மானம்

Tuesday, 30 May 2023 - 14:15

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோரிடம், விளக்கம் கோர, ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக்க ரத்நாயக்கவை, பதவிநீக்குவதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது செயற்பட்ட விதம் தொடர்பில், அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளது.

குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது, சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை என்பதுடன், அது குறித்து கட்சிக்கு அறிவிக்கவில்லை.

எனவே, இது தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான, லக்ஷ்மன் கிரியெல்ல, குறித்த இருவரிடமும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணத்தை, ஒரு வாரத்திற்குள் அறியப்படுத்துமாறு, குறித்த இருவருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.