சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது!

Tuesday, 30 May 2023 - 23:01

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%21
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான ராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.