நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கம் அதிகரிப்பு

Wednesday, 31 May 2023 - 8:16

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

QR குறியீட்டு முறைமைக்கு அமைய, வாகனங்களுக்காக, ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கம், நேற்று நள்ளிரவு முதல், அதிகரிக்கப்பட்டுள்ளது.

உந்துருளிகளுக்கு 7 லீற்றராகவும், முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீற்றாகவும் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கம், 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்பட்ட 15 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 22 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்காக, வழங்கப்பட்ட 60 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 125 லீற்றராகவும்,

பாரவூர்திகளுக்காக வழங்கப்பட்ட 75 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 125 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகிழுந்துகள் மற்றும் வேன்களுக்காக வழங்கப்பட்ட 30 லீற்றர் எரிபொருள் ஒதுக்கம், 40 லீற்றராகவும், விசேட தேவை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம், 45 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம், 25 லீற்றரில் இருந்து 45 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.