ஔடதங்களின் விலையைக் குறைக்க வேண்டும்

Wednesday, 31 May 2023 - 9:21

%E0%AE%94%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்க டொலரின் மதிப்பிறக்கத்திற்கு சமாந்தரமாக, ஔடதங்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக, அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளபோதிலும், அதற்கு சமாந்தரமாக, ஔடதங்களின் விலைகள் குறைவடையாதுள்ளமை பிரச்சினைக்குரியதாகும் என சுகாதார அமைச்சர் இதன்போது, குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், சுகாதார அமைச்சு, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், வைத்திய சேவைகள் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.