யுக்ரைனுக்கு சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.
அதில் ஏவுகணை லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பெப்பிரவரி மாதம் 24-ஆம் திகதி போர் தொடுத்தது.
இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளபாட உதவிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளபாட உதவிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.