சூடான் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல் - 18 பேர் பலி

Friday, 02 June 2023 - 8:26

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+18+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சூடான் தலைநகரான கார்ட்டூமில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா மத்தியஸ்தம் செய்த போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததால், இராணுவத்திற்கும் போட்டி இராணுவப் படைகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.

கார்ட்டூமின் தெற்கில் உள்ள மாயோவில் உள்ள சந்தையைச் சுற்றி நடந்த வன்முறையின் போது பீரங்கித் தாக்குதல் மற்றும் வான்வழி குண்டுவீச்சு தாக்குதல்கள் என்பன நடத்தப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி, கடந்த ஏழு வாரங்களில் பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை குறைந்தபட்சம் 883 ஆக பதிவு செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.