உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் மின்சார சபை மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவை இலங்கை மின்சார சபையின் இருப்புநிலைகளை மறுசீரமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இந்தநிலையில் தற்போதுள்ள திட்டக் கடன்களை மறுசீரமைப்பதற்கான ஆலோசனைகளையும் விருப்பங்களையும் வழங்க உலக வங்கி நிபுணர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த மறுசீரமைப்பு கலந்துரையாடலின்போது, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், புதுப்பிக்கத்தக்க சக்திகள் மற்றும் பிற வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள், அரச வங்கிகளில் பெறப்பட்ட மூலதனக் கடன்கள், பெறப்பட்ட ஏனைய கடன்கள், 2023 ஆம் ஆண்டிற்கான நட்டங்களை மீட்பது மற்றும் வணிகத் திட்டம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.