பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Friday, 02 June 2023 - 15:54

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+8+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%21
பிரேசில் நாட்டிள் முன்னாள் ஜனாதிபதி பெர்னாண்டோ காலர் டி மெல்லோவுக்கு ஊழல் குற்றச்சாட்டில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெர்னாண்டோ காலர் டி மெல்லோ 1990ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை பிரேசில் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

அவர் பதவிவகித்த இரண்டு வருடங்களில் அரச நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயமாக்க முயற்சித்ததால் இவரது செயற்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி கொண்டனர்.

குறிப்பாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராசின் துணை நிறுவனத்துடன், ஒரு கட்டுமான நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்ய சுமார் 32 கோடி இலஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், ஜனாதிபதி பெர்னாண்டோ காலர் டி மெல்லோ பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பெர்னாண்டோ காலர் டி மெல்லோ பதவி விலகினார்.

இது தொடர்பான வழக்கு அந்த நாட்டின் உயர்நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணையில் பெர்னாண்டோ பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் 40க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மற்றும் அவருக்கு சொந்தமான 65 நிறுவனங்களின் கணக்குகள் மூலமாகவும் பணமோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜனாதிபதி பெர்னாண்டோ காலர் டி மெல்லோவுக்கு 8 ஆண்டுகளும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.