ஆப்கானிஸ்தான் அணிக்கு 324 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Sunday, 04 June 2023 - 14:37

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+324+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய, அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மட் நபி 52 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 19 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணி 324 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட தயாராகவுள்ளது.