உலக டெஸ்ட் செம்பியன்சிப் தொடரின் இறுதிப் போட்டியிலிருந்து ஜோஷ் ஹெசில்வூட் விலகல்!

Sunday, 04 June 2023 - 21:56

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%21
உலக டெஸ்ட் செம்பியன்சிப் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹெசில்வூட் விலகியுள்ளார்.

தமது கணுக்காலில் ஏற்பட்ட வலி மற்றும் அவருக்கு ஏற்பட்டிருந்த பக்க காயத்துக்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பெரும்பகுதியை அவருக்கு இழக்க நேரிட்டது.

இந்தநிலையில், அவர் இந்திய அணியுடனான இறுதி போட்டியில் விளையாட மாட்டார் என்பதுடன், அவருக்கு பதிலாக உலக டெஸ்ட் செம்பியன்சிப் தொடரின் இறுதிப் போட்டியில் மைக்கல் நெசர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும், எதிர்வரும் 16ஆம் திகதி இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஆஷஸ் தொடரில், ஜோஷ் ஹெசில்வூட் விளையாடுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.