கையூட்டல் பெற்ற கமநல உத்தியோகத்தர்கள் கைது!

Tuesday, 06 June 2023 - 13:09

%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
ஒரு லட்சம் ரூபாவை கையூட்டலாக பெற்றுக் கொள்ள முற்பட்ட அலவத்துகொட கமநல சேவை மத்திய நிலையத்தின் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாட்டுக்கமைய கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த இருவரும் கைதாகினர்.

வயல் காணியை ஆவணம் ஒன்றில் இருந்து நீக்குவதற்காக குறித்த கையூட்டல் பெறப்பட்டுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழுவின்  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.