ஹிக்கடுவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்கு அழைக்கப்பட்ட இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக 5 பெண்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெலிகம கடற்கரையில் படகொன்று சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் குழுவும், பிரதிவாதிகள் குழுவும் காவல்நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரத்கம மற்றும் தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஒருவரிடம் இருந்த கூரிய ஆயுதங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.