மாட்டின் கால்களை கட்டி, முச்சக்கரவண்டியில் திருடிச்சென்ற இருவர் கைது!

Tuesday, 06 June 2023 - 14:36

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%2C+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
வவுனியா சமயபுரம் பகுதியில் இருந்து திருடப்பட்ட மாட்டை ஏற்றிச் சென்ற இருவர் நேற்று (05) கிராம மக்களால் பிடிக்கப்பட்டு நெளுக்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாடு கால்கள் கட்டப்பட்ட நிலையில், இறைச்சிக்காக இரவு வேளையில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் கண்ட கிராமவாசிகள், பின்னர் முச்சக்கரவண்டியை துரத்திச் சென்று சந்தேக நபர்களை சுற்றிவளைத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சாலம்பகுளம் பகுதியிலுள்ள பசு வெட்டப்படும் பகுதிக்கு இந்த மாடு சிலருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேக நபர்கள் காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு சந்தேக நபர்களையும் வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நெளுக்குளம் காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.