முன்மொழியப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் இன்று அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தத்திற்கமைய அந்த சரத்துக்கள் சட்டமூலத்திற்குள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த சட்டமூலத்தை அரசாங்கம் தயாரித்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.