டொலரின் பெறுமதி வீழ்ச்சியினால் மலையகம் மற்றும் தாழ்நிலங்களின், ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தேயிலைத் தோட்டக் கம்பனிகளும் நட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களில் மலையகம் மற்றும் தாழ்நில தேயிலை ஒரு கிலோ 1800-1900 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், கடந்த வாரம் ஒரு கிலோகிராம் தேயிலை அதிகபட்சமாக 800-900 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபா, அதிகரித்த மின்சாரக் கட்டணம், தேயிலை உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் மரம் உட்பட சகல பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக ஒரு கிலோகிராம் தேயிலைக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.