எம்.பிக்கள், அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்புக்காக 5400 காவல்துறை அதிகாரிகள்

Tuesday, 06 June 2023 - 16:02

%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+5400+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 5,400 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று தெரிவித்துள்ளார்.

அறிக்கையை பரிசீலனை செய்த பின்னர் அத்தகைய நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை நீக்கவோ அல்லது குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏனைய சிவில் கடமைகளுக்கு காவல்துறையினரின் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு மதத் தலைவர்கள், மத ஸ்தலங்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடுகள் உள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.