இரண்டாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை மாற்றுவதில் சர்ச்சை!

Friday, 09 June 2023 - 14:44

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%21
இரண்டாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை ஆவணங்கள் இல்லாமல், மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக எதிர்வரும் செப்டம்பர் 30-ந் திகதிக்கு பிறகு 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பை இந்திய மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டது.

அத்துடன் 2,000 ரூபாய் தாள்களை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருந்தது.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனுவையே நீதிமன்றம் நிராகரித்துள்ளது.