"G 20" உலக வாசனை திரவிய மாநாடு மும்பையில்

Sunday, 10 September 2023 - 14:57

%22G+20%22+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இந்தியாவில் இடம்பெறும் ஜி - 20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உலக வாசனை திரவிய மாநாடு எதிர்வரும் 15 முதல் 17 ஆம் திகதி வரை மும்பையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 
 
இந்த நிகழ்வில் இலங்கை வாசனை திரவிய சபை ஸ்தாபகர் சாரதா டீ சில்வா 'இலங்கை வாசனை திரவியங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். 
 
மூன்று வருடங்களுக்கு பின்னர் நடைபெறும் இந்த மாநாட்டில், சர்வதேசத்தை சேர்ந்த ஆயிரத்து 700 இற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, வட மாகாண வரலாற்றில் மிகப்பெரிய கைத்தொழில் கண்காட்சிகளில் ஒன்றான 'யாழ்ப்பாண கைத்தொழில் பதிப்பு 2023' நிறைவடைந்த நிலையில், இது குறித்து பல தரப்பினரும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.