உலகிலேயே மிகவும் உயரமான நாய் உயிரிழந்தது- படங்கள் இணைப்பு

Friday, 15 September 2023 - 15:21

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உலகின் மிகவும் உயரமான ஆண் நாய் என்ற சாதனை ஜியஸ் தனதாக்கிக்கொண்டதோடு அனைவரையும் கவர்ந்திருந்தது. 
 
3 அடி 5.18 அங்குலம் உயரத்தை கொண்ட குறித்த நாயானது 2022 ஆம் அதிக உயரமுடைய நாய் என்ற கின்னஸ் சாதனையை தனதாக்கிக்கொண்டது. 
 
இந்த நிலையில் நிமோனியா தாக்கம் காரணமாக கடுமையாக சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்ட ஜியஸ் கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்தது. 
 
அத்துடன் ஜியஸ் என்ற குறித்த ஆண் நாய்க்கு புற்றுநோய் காரணமாக கால் ஒன்றில் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலகிலேயே மிகவும் உயரமான ஆண் நாயான ஜியஸ் தனது 3 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது. இதனை வளத்தவர்கள் தங்களது பிள்ளையை இழந்துவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

 
No description available.
 
 
 
No description available.
 
 
 
 
No description available.
 
 
 
 
 
No description available.
 
No description available.