இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக அங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதிவரை பாடசாலைகள் மேலதிக வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை ஆயிரத்து 80 பேரிடம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நிபா வைரஸ் மனிதர்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பரவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த வைரஸ் மூளையை தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.