எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி!

Saturday, 16 September 2023 - 16:52

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%21
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை(17) இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டிக்கான பற்றுச்சீட்டுக்கள் ஒன்லைன் ஊடாக விற்பனை செய்யப்பட்டன.

இதன்படி, இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்கள் மீதமிருந்த நிலையில், நேற்றைய தினம் அனைத்துப் பற்றுசீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்திருந்தது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ள நாளைய போட்டி பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.