இந்திய நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் இன்று

Monday, 18 September 2023 - 10:23

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இந்திய நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் ஆரம்பமாகின்றது. 
 
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழமைப்போல பழைய கட்டிடத்தில் இடம்பெறவுள்ளன. 
 
நாளை முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 
 
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாமைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. 
 
இந்தநிலையில், நாடாளுமன்ற இதழில் இது தொடர்பில், விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தநிலையில், தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் நியமனம் தொடர்பான சட்டமூலத்தை இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
 
குறித்த சட்டமூலம், மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அத்துடன், சட்டத்தரணிகள் திருத்தச் சட்டமூலம், அஞ்சல் அலுவல்கள் சட்டமூலம் உள்ளிட்ட சட்டமூலங்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. 
 
இதேவேளை, புதிய நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் நேற்று இந்திய தேசியக்கொடி ஏற்றி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.