கட்டுத் துப்பாக்கி இயங்கியதில் இளைஞர் ஒருவர் காயம்!

Monday, 18 September 2023 - 16:51

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
தந்தைக்கு சொந்தமான இடத்தில் இருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்றை இளைஞர் ஒருவர் எடுக்க சென்ற பொழுது, குறித்த துப்பாக்கி இயங்கியதில், குறித்த இளைஞர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடு காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைகளுக்காக மடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் 21 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த துப்பாக்கியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.