சவர்மா சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Monday, 18 September 2023 - 17:02

%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இந்தியாவின் - நாமக்கல் பகுதியில் உள்ள உணவகமொன்றில் சவர்மா வாங்கி சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண், கடந்த சனிக்கிழமை பிற்பகல் மதிய உணவுக்காக சவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை குறித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில், நாமக்கல் பகுதியில் உள்ள உணவகங்களில் இனிவரும் நாட்களில் சவர்மா தயாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.